Sunday, October 20, 2024

20 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர்! ஜோ ரூட் ருத்ர தாண்டவம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

35 வயதாகும் ஜோ ரூட் சமீபமாக நம்பமுடியாத அளவுக்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார். கடந்த 4 வருடங்களில் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 262 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 135.1 ஓவரில் 700 ரன்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதிகமான இரட்டைச் சதங்கள்

ஜோ ரூட் 6 இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார். இதில் வெளிநாட்டில் மட்டும் 4 இரட்டைச் சதங்கள் அடங்கும்.

இங்கிலாந்துக்காக அதிக இரட்டைச் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். வாலி ஹாம்மோட் 7 முறையும் ரூட் 6 முறையும் குக் 5 முறையும் அடித்துள்ளார்கள்.

முதல் இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்துக்காக 20,000 சர்வதேச ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.

தற்போது, விளையாடுபவர்களில் கோலி முதலிடத்தில் இருக்கிறார். 535 போட்டிகளில் 27, 041 சர்வதேச ரன்கள் அடித்துள்ளார். ஜோ ரூட் 350 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

உலக அளவில் ஜோ ரூட் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

13 ஆயிரம் டெஸ்ட் ரன்களை நோக்கி…

சச்சினின் அதிகபட்ச டெஸ்ட் ரன்னான 15, 921 ரன்களை ஜோ ரூட் தாண்டுவாரென பலரு எதிர்பார்க்கிறார்கள்.

தற்போது, ஜோ ரூட் 12,647 ரன்கள் எடுத்துள்ளார். விரைவில் 13ஆயிரம் ரன்களை தொடுவார். அநேகமாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலேயே இதை சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 2,3 வருடங்கள் விளையாடினால் ஜோ ரூட் சச்சினின் சாதனையை எளிதாக முறியடிப்பார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024