Sunday, October 20, 2024

ஒட்டுமொத்த தென் மாநிலங்களை விட உ.பி.க்கு அதிக வரிப்பகிர்வு!

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

வரியின் மூலம் கிடைத்த ரூ.1.78 லட்சம் கோடி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை மத்திய அரசு இன்று (அக். 10) ஒதுக்கீடு செய்தது.

வழக்கமான தவணையுடன் கூடுதலாக அக்டோபர் மாத தவணைத் தொகையான ரூ. 89,086.50 கோடியையும் சேர்த்து மத்திய அரசு விடுவிதது.

அடுத்தடுத்து வரக்கூடிய பண்டிகை நாள்களையொட்டி முன்கூட்டியே விடுவிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த வரிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 31,962 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கியதை விட இது நான்கரை மடங்கு அதிகமாகும்.

வரிப்பகிர்வு தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. ரூ. 89,086.50 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடக்கம்..

இதையும் படிக்க | ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?

மாநிலவாரியாக…

ஆந்திரப் பிரதேசம் ரூ. 7,211 கோடி

அருணாச்சலப் பிரதேசம் ரூ. 3,131 கோடி

அஸ்ஸாம் ரூ. 5,573 கோடி

பிகார் ரூ. 17,921 கோடி

சத்தீஸ்கர் ரூ. 6,070

கோவா ரூ. 688

குஜராத் ரூ. 6,197

ஹரியாணா ரூ. 1,947

ஹிமாசலப் பிரதேசம் ரூ. 1,479

ஜார்க்கண்ட் ரூ. 5,892

கர்நாடகம் ரூ. 6,498

கேரளம் ரூ. 3,430

மத்தியப் பிரதேசம் ரூ. 13,987

மகாராஷ்டிரம் ரூ. 11,255

மணிப்பூர் ரூ. 1,276

மேகாலயா ரூ. 1,367

மிசோரம் ரூ. 891

நாகாலாந்து ரூ. 1,014

தமிழ்நாடு ரூ. 7,268

தெலங்கனா ரூ. 3,745

மேற்கு வங்கம் ரூ. 13,404

இதையும் படிக்க | மும்பை 26/11 தாக்குதல்.. 3 நாள்களாக தாஜ் ஓட்டல் வாசலிலேயே நின்றிருந்த ரத்தன் டாடா

Union Government releases tax devolution of ₹1,78,173 crore to State Governments, including one advance instalment of ₹89,086.50 crore in addition to regular instalment due in October, 2024
Advance instalment released in view of upcoming festive season and to enable… pic.twitter.com/1wBOacu5mo

— Ministry of Finance (@FinMinIndia) October 10, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024