Sunday, October 27, 2024

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

வருகிற 25-ந்தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவராக முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா இருக்கிறார். இவருக்கும் சங்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

பி.டி. உஷா ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதை பி.டி. உஷா மறுத்தார். இது தொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. வருகிற 25-ந்தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024