Friday, October 11, 2024

நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடல் கொள்ளையர் அட்டூழியம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடல் கொள்ளையர் அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் 18 பேர் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

நாகை மாவட்டம் செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், சக மீனவர்கள் 4 பேருடன் கடந்த 8-ம் தேதி காலை ஃபைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் வந்த இலங்கையை சேர்ந்த 9 கடல் கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தமிழக மீனவர்களை தாக்கியதுடன், அவர்களது வலை மற்றும் உபகரணங்களைப் பறித்துச் சென்றனர். காயமடைந்த 5 மீனவர்களும் நேற்று காலை செருதூர் மீன் இறங்கு தளத்துக்கு வந்து சேர்ந்தனர்.

இதேபோல, கோபால் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன் பிடிக்கச் சென்ற செல்லையன் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீதும், மகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான படகில் மீன் பிடிக்கச் சென்ற செல்வம் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீதும், சத்தியசீலன் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்ற விஜயன் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீதும் இலங்கை கடல்கொள்ளையர்கள் தாக்குதல்நடத்தி உள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 800 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்களை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். காயமடைந்த மீனவர்கள்ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,தாக்குதல் சம்பவம் குறித்து கீழையூர் கடலோரக் காவல் குழுமபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.

200 கிலோ வலைகள்… இதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 5 மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடல் கொள்ளையர், படகில் இருந்த 200 கிலோ வலைகள் மற்றும் 50 கிலோ மீன்களைப் பறித்துச் சென்றனர். பின்னர், கரை திரும்பிய மீனவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர காவல் குழும போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நிலையில்,தற்போது மீண்டும் தாக்குதல்சம்பவம் நடைபெற்றுள்ளது சக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024