மோசமான தோல்வி எதிரொலி: பாக். கிரிக்கெட் வாரியம் புதுப்பிப்பு!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் மோசமாக தோல்வியுற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் அதிகமான ரன்கள் அடித்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியுற்ற முதல் அணியாக பாகிஸ்தான் மிகவும் மோசமான சாதனை செய்துள்ளது.

இதையும் படிக்க: பாக். டெஸ்ட்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி..!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் வீரர்களான ஆகிப் ஜாவத், அஜார் அலி, டெஸ்ட் போட்டி நடுவர் ஆலம் தர் , அனலிஸ்ட் ஹசன் சீமா ஆகியோர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

முகமது யூசுப் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து தேசிய தேர்வாளர் குழுவில் அசாத் ஷபிக் சமீபத்தில் இணைந்தார்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறதென பிசிபி தெரிவித்துள்ளது. ஆனால், தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், ஜேசன் கில்லஸ்பி வாக்களிப்பார்களா என தெளிவாகக் குறிப்பிடவில்லை.

இதையும் படிக்க:நார்வே அணிக்காக அதிக கோல்கள்..! தந்தையாகும் ஹாலண்ட்?

சமீபத்தில் சர்வதேச நடுவர் பொறுப்பிலிருந்து ஆலிம் தார் ஓய்வு பெறுவதாகக் கூறினார். கடைசி வருடத்திலிருந்து பலமுறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றியமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய குழுவின் பொறுப்பு அடுத்த இங்கிலாந்துக்கான எதிரான டெஸ்ட் அணியையும் ஆஸி., தெ.ஆ. தொடர்களுக்கான அணியையும் தேர்வு செய்யும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024