Saturday, October 19, 2024

சென்னை சென்ட்ரல் செல்லாமல் மாற்று வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்!

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்புப்பணிகள் நடைபெறும் நிலையில், மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது.

இதையும் படிக்க:கவரைப்பேட்டை ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!

விபத்து எதிரொலியாக, தன்பாத் – ஆலப்புழா விரைவு ரயில் (13351) ரேனிகுண்டா, மேலப்பாளையம், காட்பாடி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அக்.10-ஆம் தேதி காலை 11.35 மணிக்கு தன்பாத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், நாயுடுப்பேட்டா, சூலூருப்பேட்டா, சென்னை செண்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படவில்லை.

அதேபோல, ஜபல்பூர் – மதுரை அதிவிரைவு ரயில் (02122) ரேனிகுண்டா, மேலப்பாளையம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. அக். 10-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு ஜபல்பூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலயங்கள் வழியாக செல்லாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கவரப்பேட்டை ரயில் விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024