Saturday, October 19, 2024

முக்கிய ரயில்கள் ரத்து! மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578), கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதையொட்டி, முக்கிய ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ரயில் விபத்து: மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் -தெற்கு ரயில்வே

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • இன்று(அக்.12) காலை 7.25 மணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா ஜன் சதாப்தி விரைவு ரயில்(12077) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • மறுமார்க்கத்தில், இன்று(அக்.12) பகல் 3.30 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்படும், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் ஜன் சதாப்தி விரைவு ரயில்(12078) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • இன்று (அக்.12) காலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12842) ரயில் 2 மணி நேரம் தாமதமாக, காலை 9 மணிக்கு புறப்படும். அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி – நிஸாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) – அக்.11-ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், சென்னை கடற்கரை, அரக்கோணம், ரேனிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் – லக்னௌ எக்ஸ்பிரஸ் (16093) – இன்று (அக்.12) காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் – நிஸாமுதீன் கரீப்ரத் எக்ஸ்பிரஸ் (12611) – இன்று (அக்.12) காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல்ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், ரேனிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

ஹௌரா – சென்னை சென்ட்ரல் மெயில் (12839) – அக்.10-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு, ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், கூடூர், ரேனிகுண்டா, அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

அகமதாபாத் – சென்னை சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் (12655) – அக்.10-ஆம் தேதி இரவு 9.25 மணிக்கு அகமதாபாத் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், கூடூர், ரேனிகுண்டா, அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. சூலூருப்பேட்டாவில் நிறுத்தம் கிடையாது.

பாட்னா – எர்ணகுளம் எக்ஸ்பிரஸ் (22644) – அக்.10-ஆம் தேதி பகல் 2 மணிக்கு பாட்னா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், கூடூர், ரேனிகுண்டா, மேல்பாக்கம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. பெரம்பூரில் நிறுத்தம் கிடையாது.

புது தில்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் (12616) – அக்.10-ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு புது தில்லியிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், கூடூர், ரேனிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

காக்கிநாடா துறைமுகம் – செங்கல்பட்டு சர்கார் எக்ஸ்பிரஸ் (17644) – அக்.11-ஆம் தேதி பகல் 2.30 மணிக்கு காக்கிநாடா துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில், கூடூர், ரேனிகுண்டா, சென்னை எழும்பூர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. நாயடுப்பேட்டா, சூலூருப்பேட்டா, கும்மிடிப்பூண்டியில் நிறுத்தம் கிடையாது.

  • காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜயவாடா- சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் (12711)

  • பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் (12712)

  • காலை 7.55 மணிக்கு புறப்பட வேண்டிய சூலூருபேட்டா – நெல்லூர் மெமு எக்ஸ்பிரஸ் (06745)

  • காலை 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லூர் – சூலூருபேட்டா மெமு எக்ஸ்பிரஸ் (06746)

இதையும் படிக்க:திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024