திருச்சியில் பெரும் விபத்து தவிர்ப்பு! ஏர் இந்தியா விமானம் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்தது ஏன்?

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு 140 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை(அக். 11) மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 613 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்புகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமானத்தை தரையிறக்கும் கியர் அமைப்புகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த விமானம் சுமார் 4,000 அடி உயரத்தில் 2 மணி நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்! 2 பெட்டிகள் தீப்பற்றின!

இந்த நிலையில், விமானம் உடனடியாக தரையிறக்கப்படாதது ஏன்? என்பதை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்படவில்லை.

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வானில் வரையறுக்கப்பட்ட பரப்பில் விமானம் பல தடவை வட்டமடித்து வந்தது.

இதன்மூலம், விமானத்திலிருந்த எரிபொருள் சீக்கிரமாக காலியாவதுடன் விமானத்தின் எடையும் வெகுவாக குறையும். இதன்காரணமாக, ஓடுதளத்தில் விமானத்தை சுலபமாக தரையிறக்க முடியும்.

தொழில்நுட்பக் கோளாறு ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளுக்காக மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த எதிர்பாராத சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விமானிகள் வெளியேறும் காட்சி

இதையும் படிக்க: முக்கிய ரயில்கள் ரத்து! மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்!

விமானிகளுக்கும் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே துரிதமான தகவல் பரிமாற்றம் மற்றும் அதற்கேற்ப உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முர்ளீதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில், விமானிகள், விமானப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 150 பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் காயமின்றி பத்திரமாக வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டிருந்தன. மேலும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் இருக்க அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிக்க:திருச்சி: ஏர் இண்டியா விமானம் பத்திரமாக தரையிறக்கம்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024