Sunday, October 27, 2024

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு – துணை கேப்டன் யார் தெரியுமா…?

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் முறையே பெங்களூரு, புனே, மும்பையில் நடைபெற உள்ளன.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் இன்றி களம் கண்ட இந்தியா இந்த தொடருக்கு ஜஸ்ப்ரீத் பும்ராவை துணை கேப்டனாக நியமித்துள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் முகமது ஷமி இந்த தொடருக்கான அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தொடரிலும் அவர் இடம் பெறவில்லை.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

ரிசர்வ் வீரர்கள்: ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

போட்டி அட்டவணை விவரம்:

முதல் டெஸ்ட் போட்டி – அக்டோபர் 16 – 20 – பெங்களூரு

2வது டெஸ்ட் போட்டி – அக்டோபர் 24 – 28 – புனே

3வது டெஸ்ட் போட்டி – நவம்பர் 1 – 5 – மும்பை

NEWS #TeamIndia’s squad for @IDFCFIRSTBank Test series against New Zealand announced.
Details #INDvNZ

— BCCI (@BCCI) October 11, 2024

You may also like

© RajTamil Network – 2024