Saturday, October 19, 2024

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பாபா சித்திக் இறந்திருக்கலாம்: மருத்துவர்கள்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பாபா சித்திக் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார். உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், அவரது மார்பின் முன்புறத்தில் இரண்டு துப்பாக்கி சூட்டுக் காயங்கள் இருந்தன. நிறைய இரத்த இழப்பு இருந்தது. அவரது குடும்பத்தினர் அவரை அழைத்து வந்தபோது அவர் சுயநினைவின்றி இருந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற 2 மணி நேரம் முயற்சி செய்தோம்.

பாபா சித்திக் கொலை: மருத்துவமனையில் குவிந்த பிரபலங்கள்! போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்

பாபா சித்திக் முதலில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் இதய செயல்பாடு எதுவும் இல்லை. துப்பாக்கிச் சூடு தொடர்பான காயங்கள் எத்தனை உள்ளன என்பதைச் சரிபார்க்க எங்களுக்கு நேரமில்லை. உடற்கூராய்வுக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே பாபா சித்திக் இறந்துவிட்டாரா என்று கேட்டதற்கு, மருத்துவர் ஒருவர் அளித்த பதிலில், அது சாத்தியம். அவரை அழைத்து வந்தபோது அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அவர் சுயநினைவின்றி இருந்தார். நாங்கள் எவ்வளவோ காப்பாற்ற முயற்சித்தோம். ஆனால் சனிக்கிழமை இரவு 11.27 மணிக்கு சித்திக் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024