பருவமழை முன்னெச்சரிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே பருவமழைய எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியில் பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி 5 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 3 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணிகளை ஒருங்கிணைக்க கட்டா ரவிதேஜா, கே.ஜெ.பிரவீன், அமித் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்டலக் கண்காணிப்பு அலுவலர், மண்டல அலுவலர், செயற் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் நியமனளும் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.15 அல்லது 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகல் 1 வரை சென்னை, 20 மாவட்டங்களில் கனமழை!

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024