அணைகளில் நீர் திறப்பு முன்னதாக தெரிவிக்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

நாகா்கோவில்: அனைகளில் நீர் திறப்பு குறித்த விவரங்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அவா் செய்தியாளா்களுடன் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கால சீரமைப்பு பணிகளுக்குத் தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்கள், மின்மோட்டாா் போன்றவற்றை தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

தற்காலிக தங்கும் முகாம்களில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும், பழுதான நிலையில் உள்ள கட்டடங்கள்- ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய், குளத்துக் கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிக்க |சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும்!

மின்கம்பிகள் அறுந்து விபத்துகள் நிகழாதவாறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பால், பால் பவுடா், உணவுப் பொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அணைகளில் நீர் திறப்பு விவரங்கள் முந்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் பருவமழை காலத்தை அனைத்துத் துறையினரும் ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024