இஸ்ரேல் பல்முனைத் தாக்குதல்: லெபனானில் 13 பேர் பலி!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

லெபனானின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 36 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

2''லெபனானில் செளஃப் (Chouf ) மாவட்டத்திற்குட்பட்ட பர்ஜா (Barja) பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். ஏவுகணைத் தாக்குதலில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்ததால், அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்தன.

உயிரிழந்தவர்களின் உடல்களும் படுகாயமடைந்தவர்களும் சிப்லின் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

லெபனானில் மாயிஸ்ரா (Maaysra) பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

பாஸ்ரெளன் மாவட்டத்திற்குட்பட்ட தெர் பில்லா (Deir Billa) பகுதியில் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | எங்களின் முழு பலத்துடன் லெபனானை ஆதரிப்போம்: ஈரான் அரசு!

மேலும், இஸ்ரேலுக்குச் சொந்தமான போர் விமானம் நபாடி நகரத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு மேல் பறந்தபோது, குண்டுகளை வீசியுள்ளது. இதில் 30 கடைகள் முழுவதும் சேதமடைந்தன. 5 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி முதல் இஸ்ரேல் – ஹமாஸ் படையினரிடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் படைக்கு ஹிஸ்புல்லாக்கள் ஆதரவாக செயல்படுவதால், ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதையும் படிக்க | நோபல் பரிசுக்குப் பிறகு… 3 நாள்களில் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனை!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024