சென்னை: ரயில் சேவைகளில் மாற்றம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சென்னை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கி கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், சென்னையிலிருந்து இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • நேற்று(அக்.14) மாலை 6.40 மணிக்கு புறப்பட்ட லோக்மான்யா திலக் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12613) ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.

  • நேற்று(அக்.14) இரவு 11.45 மணிக்கு புறப்பட்ட மங்களூரு சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (22638) திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

இன்று(அக்.15) இரவு 8.50 மணிக்கு புறப்படும், சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (22639), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும்.

நேற்று(அக்.14) மாலை 4.45 மணிக்கு புறப்பட்ட இந்தூர் – கொச்சுவேலி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22645), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லாது.

அதேபோல, நேற்று முன்தினம்(அக்.13) காலை 11.35 மணிக்கு புறப்பட்ட தான்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (13351), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(அக்.15) இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12657), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 11.20 மணிக்கு புறப்படும்.

இன்று(அக்.15) காலை 6 மணிக்கு புறப்பட்ட, ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது.

இன்று(அக்.15) காலை 6.35 மணிக்கு புறப்பட்ட கொச்சுவேலி – கோரக்பூர் எக்ஸ்பிரஸ் (12512), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லாது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024