அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: சத்தீஸ்கர் முதல்வர்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு சத்தீஸ்கரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3.9 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், இந்த உயர்வு இந்தாண்டு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக இந்தாண்டு மார்ச் மாதம், மகாராஷ்டிர அரசு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 46 சதவீதமாகக் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தாண்டு மேலும் 4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024