தமிழகமும் காஷ்மீரும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிக்கும்! -முதல்வர் மு.க. ஸ்டாலின்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ‌ண்மையி‌ல் நட‌ந்து முடி‌ந்த ஜ‌‌ம்​மு-கா‌ஷ்​மீ‌ர் பேரவைத் தே‌ர்​த​லி‌ல் 42 இட‌ங்​களைக் கை‌ப்​ப‌ற்றி தனி‌ப்பெ​ரு‌ம் க‌ட்சி​யாக தேசிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி உரு​வெடு‌த்​து‌ள்​ளது. அத‌ன் கூ‌ட்ட​ணி‌க் க‌ட்சி​க​ளான‌ கா‌ங்​கி​ர‌ஸ் ம‌ற்​று‌ம் மா‌ர்‌க்​சி‌ஸ்‌ட் க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் ஆகி​யவை முறையே ஆறு, ஒரு இட‌த்​தி‌ல் வெ‌ற்றி பெ‌ற்​று‌ள்​ள​தா‌ல் தேசிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி‌க்கு ச‌ட்ட‌ப் பேரவையி‌ல் பெரு‌ம்​பா‌ன்மை பல‌ம் கிடைத்​து‌ள்​ளது. ஜ‌‌ம்​மு-கா‌ஷ்​மீ‌ர் ச‌ட்ட‌ப் பேர​வைத் தே‌ர்​த​லி‌ல் வெ‌ற்றி பெ‌ற்​று‌ள்ள சுயேச்சைக​ளி‌ல் நா‌ன்கு பே‌ர் தேசிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி‌க்கு ஆத​ரவு தெரி​வி‌த்​து‌ள்​ள​ன‌‌ர். இத‌ன் மூல‌ம் க‌ட்சி​யி‌ன் பல‌ம் 46-ஆக உய‌ர்‌ந்​து‌ள்​ளது.

இதையடுத்து, தே​சிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி​யி‌ன் ச‌ட்ட‌ப் பேர​வைக் குழு‌த் தலை​வ​ராக ஒம‌ர் அ‌ப்​து‌ல்லா ஒரு​ம​ன‌​தாக தே‌ர்வு செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டார். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா இன்று(அக்.16) பதவியேற்றுக் கொண்டார்.

இதையும் படிக்க:விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம்: ஒமர் அப்துல்லா

இந்த நிலையில், ஒமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீர் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!’

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால், மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவிருந்ததன் காரணமாக தன்னால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தன் சார்பாக திமுக எம்.பி. கனிமொழி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையும் பதிவிட்டுள்ளார்.

மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இந்தியாவின் தென் முனையில் உள்ள தமிழகமும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரும் உரக்கக் குரலெழுப்பும் என்றும், இணைந்து பயணித்து வெற்றி காண்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

My hearty congratulations to Hon’ble @OmarAbdullah on assuming office as the Chief Minister of Jammu and Kashmir!
Although I received an invitation from @JKNC_ President, Respected Farooq Abdullah, to attend the swearing-in ceremony, due to the ongoing heavy rains in Tamil Nadu… pic.twitter.com/dwYOGUbjps

— M.K.Stalin (@mkstalin) October 16, 2024

இதையும் படிக்க: சென்னையில் வெள்ளநீர் வடியக் காரணம்? – மு.க. ஸ்டாலின் பேட்டி

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024