இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாக். 366 ரன்களுக்கு ஆல்-அவுட்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி 366 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், பேட்டிங்கை தோ்வு செய்தார்.

இதையும் படிக்க..: சென்னையில் வெள்ளநீர் வடியக் காரணம்? – மு.க. ஸ்டாலின் பேட்டி

அதன் படி தனது முதல் இன்னிங்ஸில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த சயிம் அயுப் நிதானமாக ரன்கள் சோ்த்தாா். மறுபுறம், கேப்டன் ஷான் மசூத் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

4-ஆவது பேட்டரான கம்ரான் குலாம், அயூபுடன் இணைந்து ஸ்கோரை உயா்த்த, அந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சோ்த்தது. அயுப் 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அதிகபட்சமாக கம்ரான் குலாம் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 118 ரன்கள் விளாசினார்.

முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் முகமது ரிஸ்வான் 37 ரன்களுடனும், சல்மான் அகா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையும் படிக்க..:சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் காற்றழுத்த மண்டலம்

பின்னர் 2-வது நாள் ஆட்டம் இன்று (அக்.16) தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே முகமது ரிஸ்வான் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அமிர் ஜமால் 37 ரன்களிலும், நோமன் அலி 32 ரன்களிலும் சாஜித் கான் 2 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

123.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 366 ரன்கள் எடுத்தது.

அசத்தலாக பந்துவீசிய இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும், மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிக்க..:ஜம்மு – காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024