அஸ்ஸாமில் ரயில் தடம்புரண்டு விபத்து!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் இன்று (அக். 17) தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில், 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமின் அகர்தலா – லோக்மான்யா திலக் முனையம் இடையே இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில், திபலாங் ரயில் நிலையம் அருகே இன்று மாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானது.

லூம்திங் மண்டலத்துக்குட்பட்ட பர்தார்புல் மலை அருகே சென்றுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என வடகிழக்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ரயில் என்ஜின் பெட்டி உள்பட 8 பெட்டிகள் தடம்புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சபரிமலை: புதிய மேல்சாந்தியாக அருண் குமார் தேர்வு!

விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், லூம்திங் – பாதர்பூர் இடையிலான ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற ரயிலில் பயணித்த பயணிகள் குறித்து தகவல்களை அறிந்துகொள்ள ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. உதவி எண்கள்: 03674 263120, 03674 263126

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024