இனி இலவச டயாலிசிஸ்: முதல் வாக்குறுதியை நிறைவேற்றிய நயாப் சைனி!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஹரியாணாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என்று முதல்வர் நயாப் சைனி அறிவித்தார்.

அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சைனி செய்தியாளர்களுடன் பேசினார். இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, பட்டியலின சாதிகளுக்குள் துணைப் பிரிவுகளை உருவாக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்று, இன்று முதலே மாநில அரசு செயல்படுத்தத் தொடங்கும்.

இதையும் படிக்க:வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

வியாழனன்று இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட சைனி, பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஹரியாணா மக்கள் காங்கிரஸ் ஏழைகளுக்கு அளித்த பொய்களை முறியடித்துள்ளனர்.

பாஜக கட்சிக்கு பெரும் ஆணை வழங்கியதன் மூலம், பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு மக்கள் ஒப்புதல் முத்திரை பதித்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிஸ் சேவை வழங்கத் தொடங்கும். நான் பொறுப்பேற்றதும் என்னுடைய முதல் கையெழுத்து சிறுநீரக நோயாளிகள் தொடர்பான இலவச சிகிச்சைக்கு தான் என்றார்.

இதையும் படிக்க: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!

தேர்தலிலும் இந்த வாக்குறுதியை அளித்திருந்தோம். டயாலிசிஸ் செய்ய மாதம் 20,000 முதல் 25,000 வரை செலவாகும். இனி, ஹரியாணா அரசே இந்த செலவுகளை ஏற்கும். அமைச்சரவை முடிவுகள் இன்று முதல் அமல்படுத்தப்படும்.

மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தங்கள் வழியைச் சீர்செய்ய வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024