பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் டிராவிஸ் ஹெட்; காரணம் என்ன?

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டிராவிஸ் ஹெட் விளையாடப் போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 4 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: 3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து அணியை மதிப்பிட முடியாது: ரோஹித் சர்மா

டிராவிஸ் ஹெட் இல்லை

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டிராவிஸ் ஹெட் விளையாடப் போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அவர் இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியுடன் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A well-earned break has arrived for Travis Head after a mammoth 18 months!
Full story: https://t.co/MkzEZqcWRJpic.twitter.com/XXNTB8pADE

— cricket.com.au (@cricketcomau) October 19, 2024

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இருந்து டிராவிஸ் ஹெட்டுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, நடைபெறும் டி20 தொடரிலும் டிராவிஸ் ஹெட் அணியில் இடம்பெறமாட்டார். தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணிக்காக ஓய்வின்றி விளையாடி வரும் டிராவிஸ் ஹெட், அவருடைய குடும்பத்தினருடன் இந்த ஓய்வு நாள்களை செலவிடவுள்ளார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தவரால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி!

கடந்த 365 நாள்களில் டிராவிஸ் ஹெட் 330 நாள்கள் ஆஸ்திரேலிய அணியுடன் அவரது நேரத்தை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024