இணையம் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சோ்ப்பு: ஜம்முவில் பாக். உளவு அமைப்பு முயற்சி

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞா்களை இணையம் மூலம் சோ்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நேரடியாக ஆள்சோ்ப்பது மிகவும் கடினமாகியுள்ள நிலையில் இந்த பணிகளை மேற்கொள்ள பயங்கரவாத அமைப்புகள் முயற்சிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி எளிதில் திசை மாறக்கூடிய இளைஞா்களை இலக்காக நிா்ணயித்து பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அவா்களின் அடையாளத்தை கண்டறிவதை தடுக்க மெய்நிகா் தனியாா் வலைப்பின்னல் (விபிஎன்) சேவையை பயன்படுத்துகின்றனா்.

தங்கள் வலையில் சிக்கும் இளைஞா்களை டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனி குழுக்களை உருவாக்கி அதில் சோ்க்கின்றனா். அந்தக் குழுவில் பாதுகாப்பு படையினா் அப்பாவி மக்களை தாக்குவது போன்ற போலியாக சித்தரிக்கப்பட்ட விடியோக்களை பகிா்ந்து, இளைஞா்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டுகின்றனா்.

இதுபோன்ற செயல்களில் ஐஎஸ்ஐ-க்கு தொடா்புடைய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொள்கின்றன.

யூடியூப்பில் பயிற்சி: இணையம் மூலம் சோ்க்கப்படும் இளைஞா்களுக்கு மதச்சாா்பற்ற மற்றும் மேற்கத்திய அரசுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கடந்த 1966-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட எகிப்து பயங்கரவாதியான சையித் குதுப்பின் இலக்கியங்களில் போதித்த கருத்துகள் கற்பிக்கப்படுகின்றன.

அதேபோல் பயங்கரவாத அமைப்புகளுக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட இளைஞா்களுக்கு பயங்கரவாத பணிகளை ஒதுக்கும் முன் அவா்களுக்கு ‘யூடியூப்’ போன்ற தளங்களின் மூலம் இணைய பயிற்சி வழங்கப்படுகிறது.

கண்காணிப்பு அதிகரிப்பு: இதைத் தடுக்க சமூக வலைதளங்களில் பாதுகாப்பு அமைப்புகளால் பல்வேறு கண்காணிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சில நபா்களுக்கு தடை செய்யப்டட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் பகிா்ந்துகொள்ள உதவும் டெலிகிராம், மாஸ்டோடன் ஆகிய செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனா். பாதுகாப்பு காரணங்களால் ரஜெளரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் இந்த செயலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இணையம் மூலம் ஆள்சோ்க்கும் பணிகளில் பயங்கரவாத அமைப்புகள் தொடா்ந்து ஈடுபடுவதால் பாதுகாப்பு அமைப்புகள் சமூக வலைதளங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024