3
தீபாவளிப் பண்டிகையையொட்டி நெரிசலைக் குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஹுப்பள்ளியில் இருந்து மங்களூருக்கு நவ. 2-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில் மங்களூரு – ஹுப்பள்ளி இடையே நவ. 3-ல் சிறப்பு இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தீபாவளியையொட்டி 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர்
கே.எஸ்.ஆர். பெங்களூரு – சென்னை எழும்பூர் இடையே அக். 30, நவ. 3-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் – கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே அக். 30, நவ. 3-ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
யஷ்வந்த்பூர் – மங்களூரு இடையே அக். 30, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.