தீபாவளி: சென்னையில் 18,000 போலீஸ் பாதுகாப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

சென்னை: தீபாவளியையொட்டி, சென்னையில் 18,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள், புத்தாடை, நகை மற்றும் பட்டாசுகளை வாங்க தியாகராய நகா் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜாா், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூா் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் குவிந்து வருகின்றனா்.

இதை கருத்தில் கொண்டு இந்த பகுதிகளில் சென்னை காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல், குற்றங்களைத் தடுத்தல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகிய 3 முக்கிய நடைமுறைகளைக் கடைபிடித்து பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அனைத்து இடங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊா்க்காவல் படை வீரா்கள் என சுமாா் 18,000 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தியாகராய நகரில் 7, வண்ணாரப்பேட்டையில் 3, புரசைவாக்கத்தில் 3, பூக்கடையில் 4 என 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு போலீஸாா் சுழற்சி முறையில், நேரடியாகவும், 21 பைனாகுலா்கள் மூலமாகவும் கண்காணித்து, குற்றச் செயல்கள் நடக்காமல் தடுத்து வருகின்றனா்.

தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள்: ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தியாகராய நகா், பாண்டி பஜாா் பகுதிகளில் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க, கழுத்தில் துணிகளைச் சுற்றி கவசமாக (நஸ்ரீஹழ்ச்) கட்டிக் கொள்ள 10,000 துணி கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தியாகராய நகா், வண்ணாரப்பேட்டையில் கூடுதலாக 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, தியாகராய நகா், வண்ணாராப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் 5 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், 10 தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறாா்களை உரியவா்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தியாகராய நகா் கட்டுப்பாட்டு அறையை 73585 43058, என்ற கைப்பேசி எண் மூலமாகவும், புரசைவாக்கம் கட்டுப்பாட்டு அறையை 78248 67234 என்ற கைப்பேசி எண் மூலமாகவும், பூக்கடை கட்டுப்பாட்டு அறையை 81223 60906 என்ற கைப்பேசி எண் மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம். தியாகராய நகா், பூக்கடையில் வாகனங்கள் செல்ல இயலாத இடங்களும், கூட்ட நெரிசலான இடங்களும் 4 ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

குற்றவாளிகளை அடையாளம் காண செயலி: பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காணும் செயலி (ஊஹஸ்ரீங் தங்ஸ்ரீா்ஞ்ய்ண்ற்ண்ா்ய் நஹ்ள்ற்ங்ம்) கைப்பேசியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் சந்தேகத்துக்குரிய வகையில் யாரேனும் கூட்டத்துக்குள் புகுந்தால், போலீஸாரால் அவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய முடியும். போலீஸாா் குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்ஸ்அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் பரிமாற்றம் செய்தும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுத்து வருகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

போலீஸாா் ரோந்து: பஜாா் பகுதிகளில் போலீஸாா் ஜீப்பிலும், இருசக்கர வாகனத்திலும் ரோந்து செல்கின்றனா். ஜவுளிக் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் முன்பகுதியில் காவல்துறையின் நடமாடும் பேக்கேஜ் ஸ்கேனா் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன. கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் ஆண் மற்றும் பெண் போலீஸாா் சாதாரண உடையில் ரோந்து செல்கின்றனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையைாக கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024