ஆஸி. முதல்தரப் போட்டி: ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல்தரப் போட்டிக்கு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்தியா ஏ அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இந்தியா ஏ அணி 2 முதல் தரப்போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகளில் முதல் போட்டி குயிஸ்லாந்தின் மேக்கேயிலும், இரண்டாவது போட்டி மெல்போர்னிலும் நடைபெற இருக்கிறது.

மே.இ.தீவுகள் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்; இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் நியமனம்!

இந்தியாவின் முதன்மை அணி நவம்பர் மாதத்தின் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகளுக்குப் பின்னர் இந்தியா முதன்மை அணியுடன் பெர்த் மைதானத்தில் இந்தியா ஏ அணி விளையாட இருக்கிறது.

இந்தியாவின் முதன்மை அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை என்ற விமர்சனம் இந்திய கிரிக்கெட் அணித் தேர்வாளர்கள் மீது இருந்தது.

இந்த நிலையில் ரஞ்சி கோப்பையில் சதம் அடித்த ருதுராஜ் கெய்வாட்டுக்கு தலைமைப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ககிசோ ரபாடா புதிய சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்கமாட்டர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியா ஏ அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்தியாவின் முதன்மை அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிமன்யு ஈஸ்வரன் துலீப் டிராபியில் இரண்டு சதங்களும், இரானி கோப்பையில் ஒரு சதமும் அடித்திருந்தார். அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸ் சதத்தையும் ருதுராஜ் கெய்க்வாட் அடித்திருந்தார்.

106 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்; தென்னாப்பிரிக்கா 34 ரன்கள் முன்னிலை!

இந்திய அணி வீரர்கள்

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், தனுஷ் கோடியான்

  • அக்டோபர் 31 – நவம்பர் 3: 1-வது முதல்தரப் போட்டி

  • நவம்பர் 7-10: 2-வது முதல்தரப் ஆட்டம்

13 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் மட்டுமே; பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா?

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024