இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா டேவிட் வார்னர்?

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறவும் தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

ஓய்வு முடிவை திரும்ப பெறத் தயார்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறவும் தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இதனை நான் விளையாட்டுக்காக கூறவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் எனது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு, ஆஸ்திரேலிய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. அதனால், நானும் அவர்களுடன் இணைந்து விளையாடும் அளவுக்குத் தயாராகவே இருக்கிறேன்.

இதையும் படிக்க: இந்த முறை மிஸ் ஆகாது; இந்தியாவுக்கு சவால் விடுகிறாரா பாட் கம்மின்ஸ்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக உண்மையில் என்னுடைய தேவை ஆஸ்திரேலிய அணிக்கு இருப்பின், ஷீல்டு அணிக்காக அடுத்த போட்டியில் விளையாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது நன்கு யோசித்து எடுத்த முடிவே. ஆனால், அணிக்கு என்னுடைய பங்களிப்பு தேவைப்பட்டால் எனது ஓய்வு முடிவை திரும்ப பெறவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

37 வயதாகும் டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த போட்டியில் டேவிட் வார்னர் 34 ரன்கள் மற்றும் 57 ரன்கள் முறையே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024