இலங்கை தொடர்: நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு மிட்சல் சான்ட்னர் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிரந்தர கேப்டனாக தொடருவாரா என்பது பின்னர் உறுதிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்தாண்டு தொடக்கத்தில் தனது பதவியில் இருந்து விலகினார்.

இதையும் படிங்க..: வங்கதேச ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

நாதன் ஸ்மித், விக்கெட் கீப்பர் மிட்ச் ஹே ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இளம்வயது கேப்டனான மிட்சல் சான்ட்னர் தலைமை தாங்வது நல்ல முடிவாக இருக்கும் என்று நியூசிலாந்து தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியில் இருக்கும் 6 வீரர்கள் இலங்கைக்கு எதிரான தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தேர்வாளர் சாம் வெல்ஸ் கூறும்போது, “2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடக்கமாக இருக்கும். மேலும், 2027 ஆம் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை மீதும் ஒரு கண் வைத்திருக்கிறோம். அதை கருத்தில் கொண்டு அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..: டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக 6000 ரன்களை கடந்த முதல் வீரர்!

இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வருகிற நவம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகின்றன.

நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் ஃபிலிப்ஸ், க்ளென் ஃபிலிப்ஸ் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்.

இதையும் படிங்க..: டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024