Friday, September 20, 2024

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப்பெட்டி – ராகுல்காந்தி

by rajtamil
0 comment 35 views
A+A-
Reset

புதுடெல்லி,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது ஒரு கருப்புப்பெட்டி. இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஆராய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.நமது தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன. அமைப்புகள் பொறுப்பேற்க முடியாத நிலையில் ஜனநாயகம் ஏமாற்று நாடகமாக மாறி மோசடிக்கு ஆளாகிறது என பதிவிட்டுள்ளார்.

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ் கூறியிருந்தநிலையில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

EVMs in India are a "black box," and nobody is allowed to scrutinize them.
Serious concerns are being raised about transparency in our electoral process.
Democracy ends up becoming a sham and prone to fraud when institutions lack accountability. https://t.co/nysn5S8DCFpic.twitter.com/7sdTWJXOAb

— Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2024

You may also like

© RajTamil Network – 2024