மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சிவசேனை!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை சிவசேனை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 45 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனை கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாணேயில் உள்ள கோப்ரி-பஞ்ச்பகாதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் அமலாகத்துறை சோதனை!

जय महाराष्ट्र
हिंदुहृदयसम्राट वंदनीय शिवसेनाप्रमुख बाळासाहेब ठाकरे आणि वंदनीय धर्मवीर आनंद दिघे साहेबांच्या आशीर्वादाने, शिवसेनेचे मुख्य नेते आणि मुख्यमंत्री मा. ना. श्री. एकनाथजी शिंदे यांच्या आदेशानुसार महाराष्ट्र विधानसभा निवडणूक – २०२४ साठी शिवसेना पक्षाच्या अधिकृत… pic.twitter.com/pym7h5XiF7

— Shivsena – शिवसेना (@Shivsenaofc) October 22, 2024

2022 ஆம் ஆண்டு அப்போதைய மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாகவும் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் குலப்ராவ் பாட்டீல், தீபக், அப்துல் சத்தர் மற்றும் சம்புராஜ் தேசாய் ஆகியோர் முறையே ஜல்கான், சவந்த்வாடி, சிலோட், பதான் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

மற்றொரு அமைச்சரான தாதா பூஸ் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலேகான் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

சிவசேனையின் கூட்டணிக் கட்சியான பாஜக ஞாயிற்றுக்கிழமை 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறவுள்ளது.

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜேஎம்எம்!

சிவசேனை கட்சி பல தலைவர்களின் உறவினர்களையும் களமிறக்கியுள்ளது.

ராஜபூரில் அமைச்சர் உதய் சமந்தின் சகோதரர் கிரண் சமந்தும், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் அனில் பாபரின் மகன் சுஹாஸ் பாபர், சாங்லி மாவட்டத்தில் உள்ள கானாபூரிலும், மும்பை வடமேற்கு மக்களவை உறுப்பினர் ரவீந்திர வைகரின் மனைவி மனிஷா வைக்கர், ஜோகேஸ்வரி (கிழக்கு) தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் அட்சுலின் மகன் அபிஜித் அட்சுல் அமராவதி மாவட்டத்தில் உள்ள தர்யாபூர் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சத்ரபதி சம்பாஜிநகர் மக்களவை உறுப்பினர் சந்தீபன் பும்ரேவின் மகன் விலாஸ் பும்ரே பைதான் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக, சிவசேனை மற்றும் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை கூட்டணியாகக் கொண்ட ஆளும்கட்சியான மகாயுதி, பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024