Friday, October 25, 2024

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்தற்காக பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

வயநாடு தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கலின்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறைக்கு வெளியே இருக்கும் புகைப்படத்தினை சுட்டிக்காட்டிய பாஜகவினர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கார்கேவை பிரியங்கா, ராகுல், சோனியா காந்தி மூவரும் வெளியில் நிற்க விட்டதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை பாஜகவினர் அவமதித்த பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியதாவது, “பாஜகவினர் கூறுவது முழுக்க முழுக்க பொய்கள் நிறைந்தவை. வேட்புமனு தாக்கல் நேரத்திற்கு முன்னதாகவே செல்லுமாறு, பிரியங்கா காந்தி அறிவுறுத்தப்பட்டிருந்தார்; அதனால்தான், முன்னதாகவே பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறைக்குள் இருந்தார். இதனைத் தொடர்ந்து நான் உள்பட சோனியா, ராகுல் மூவரும் வேட்புமனு தாக்கல் அறைக்கு சென்றபோதே அறையின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.

அறைக்கதவுகள் திறக்கும் வரையில் நாங்களும் வெளியில்தான் காத்திருந்தோம். அதுபோலவே, எங்களுக்கு அடுத்து வந்த மல்லிகார்ஜூன கார்கேவும் காத்திருக்க வேண்டியிருந்தது. பொய்களைப் பரப்புவதன் மூலம், கார்கேவை பாஜக அடிக்கடி அவமதித்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:விளையாட்டை பொழுதுபோக்காகப் பார்ப்பதில்லை: மு.க. ஸ்டாலின்

இதுகுறித்து, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா “காங்கிரஸின் மூத்தத் தலைவரும் தலித் தலைவருமான கார்கே மீது அவமரியாதை காட்டப்பட்டுள்ளது’’ என்று கூறியிருந்தார்.

கர்நாடக பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் “பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது, கார்கே வெளியில் நிறுத்தப்பட்டிருந்தார்; ஏனெனில், கார்கே அவர்களது குடும்பம் அல்ல. அவர்கள் மூத்த தலித் தலைவரையும் கட்சித் தலைவரையும் இவ்வாறு நடத்தினால், வயநாடு மக்களை எப்படி நடத்துவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும், பாஜக அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது “இன்று பிரியங்கா காந்தியின் நியமனத்தின்போது, அறையிலிருந்து மல்லிகார்ஜுன கார்கே வெளியேற்றப்பட்டதைப் போல, இடஒதுக்கீட்டை நீக்கிய பிறகு, ராகுல் காந்தி தலித் சமூகத்தினரின் மரியாதையையும் வாய்ப்புகளையும் பறித்துவிடுவார். ராகுலின் குடும்பத்தால் கார்கேவை இப்படி அவமதிக்க முடிந்தால், தலித் சமூகத்தின் மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்’’ என்று பதிவிட்டிருந்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024