Sunday, October 27, 2024

உக்ரைன், காஸா, லெபனானில் அமைதி தேவை: ஐ. நா. பொதுச்செயலாளர்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

எல்லைகளில் அமைதி தேவை என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இன்று (அக். 24) தெரிவித்தார்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் அவர் இதனை வலியுறுத்தினார்.

ரஷியாவின் கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. அக். 22, 23 என இரு நாள்களுக்கு இந்த மாநாடு நடைபெற்றது.

உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், எல்லைகளைக் கடந்து அமைதி தேவை என பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தினார்.

உடனடி போர் நிறுத்தத்தின் மூலம் காஸா எல்லைகளில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளைத் திறம்பட வழங்க வேண்டும்.

இதேபோன்று லெபனானிலும் உக்ரைனிலும் அமைதி திரும்ப வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 -ஐ அமல்படுத்துவதை நோக்கி நாம் நகர வேண்டும் எனக் குறிப்பிட்டார். (2006 ஆம் ஆண்டு லெபனான் – இஸ்ரேல் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தத் தீர்மானம் உதவியது).

இதையும் படிக்க | காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024