Sunday, October 27, 2024

டாக்ஸிக் படத்தை தேர்வு செய்தது ஏன்? நடிகர் யஷ் விளக்கம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

கேஜிஎஃப், கேஜிஎஃப் – 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் லையர்ஸ் டைஸ் படம் 2 தேசிய விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது, தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் டின்னு என்கிற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தேசிய விருதுக்குப் பிறகும் கிண்டல்களால் பாதிக்கப்படும் ஆலியா பட்..!

கேஜிஎஃப் 2 படத்துக்குப் பிறகு யஷ் கீது மோகன் தாஸ் படத்தில் நடிப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் யஷ் பேட்டியளித்தார். அதில் யஷ் பேசியதாவது:

வெற்றி என்பது மாயை!

எனக்கு வெற்றி தோல்வி குறித்து கவலையில்லை. வெற்றி என்பது மாயை, வாரம் வாரம் மாறக்கூடியது. கீது மோகன் தாஸ் மிகவும் ஆர்வமானவர். அவரது ஈடுபாடு எனக்கு மிகவும் பிடித்தது.

கதைதான் மிகவும் முக்கியம். அந்தக் கதை பலருக்கும் பிடித்தால் அது மிகப்பெரிய கமர்ஷியல் படமாக மாறுகிறது. நான் கீது மோகன்தாஸின் எந்தப் படத்தையும் பார்க்கவில்லை. ஆனால், அவரது ஆர்வம் எனக்குப் பிடித்திருக்கிறது.

இதையும் படிக்க: மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர்..! சல்மான் கானுக்கு பாடகர் அறிவுரை!

படத்துக்கு நோக்கம் மட்டுமே முக்கியம். அதற்கு ஆர்வமும் அதற்கான நேரமும் இருந்தால் செய்யவேண்டியதுதான். நான் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. எனது இதயத்துக்கு ஒரு கதைப் பிடித்திருந்தால் செய்வேன். எனது நோக்கமும் அவரது நோக்கமும் ஒன்றாக இருப்பதால் இதைச் செய்கிறேன்.

வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டும்!

வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது எனக்கு பிடிக்கும். இல்லையெனில் வாழ்க்கை மிகவும் சோம்பலாக இருக்கும். எதையாவது புதியதாக செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி போல நான் ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன். அதிலிருந்து எதையாவது கற்றுக்கொள்ள அல்லது பெரியதாக வெற்றிபெற விரும்புகிறேன்.

படப்பிடிப்புதான் முக்கியம். மேலும், நம்பிக்கை மிகவும் முக்கியம். ரசிகர்களின் நேரத்தினையும் ரசனையையும் மதிக்கிறேன்.

நீங்கள் எல்லோரும் நினைப்பதுபோல கீது மோகன்தாஸ் இல்லை. அவரால் மாஸ் கமர்சியல் படத்தையும் இயக்க முடியும். மிகவும் சுவராசியமான படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், யார் யார் என்று சொல்லமாட்டேன் என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024