Thursday, October 24, 2024

தவெக மாநாடு: பெரியார், காமராஜர் கட்-அவுட்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு திடல் முன்பு காமராஜர், பெரியார், நடிகர் விஜய் மற்றும் அம்பேத்கர் முழு உருவ 70 அடி உயர பிரம்மாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 85 ஏக்கா் பரப்பளவு கொண்ட இடத்தில் மாநாடும், சுமாா் 207 ஏக்கா் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டு, தவெக மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை வியாழக்கிழமைக்குள் (அக்டோபா் 24) ஒப்படைக்கும் வகையில், அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்தி மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிக்க: வரும் ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும்!

மாநாட்டு பந்தல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வெற்றி கழகத்தினர் மாநாடு குறித்து விளம்பர படுத்த மாவட்ட காவல்துறை நிர்வாகத்திடம் அனுமதி கோரி இருந்தனர். அதற்கு காவல் துறையினர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் விக்கிரவாண்டி பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் மாநாட்டு திடல் மற்றும் விக்கிரவாண்டியை சுற்றி விளம்பர பேனர்கள் மற்றும் 60 அடி உயரத்தில் ஹீலியம் கேஸ் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்கவிட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024