Saturday, October 26, 2024

முடிச்சு உட்டீங்க போங்க..! கவினை கிண்டல் செய்த நெல்சன், ரெடின் கிங்ஸ்லி!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

நெல்சன் தயாரிப்பில் முதல் படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடித்துள்ளார். இப்படத்திற்கு, ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் போஸ்டர்.

இப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பிச்சைக்காரராக நடித்துள்ள கவின் கவனம் பாராட்டைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நெல்சன், கவின், ரெடின் பங்கேற்றனர்.

அதில் நெல்சன் கூறியதாவது:

கவின் மெத்தேட் ஆக்டிங் வகையிலானவர். ஒருநாள் படப்பிடிப்பு சென்று பார்த்தேன். அதில் கவின் அவர் பாட்டுக்கு திரிகிறார். நான் சிரித்தாலும் அதற்கு கவின் மெதுவாகவே சிரிக்கிறார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்புறம்தான் தெரிகிறது அவர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார். இரண்டு முறை சிரித்தால் அடுத்தமுறை மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவார்.

அவர் அப்படி செய்ததுக்கு அருகில் இருந்த நபர் ‘தல அவர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்’ என்று கூறினார். கவின் மெத்தேட் ஆங்கிடிங் செய்கிறார் என்று எனக்கே இது இப்போதுதான் தெரியும். 5 படங்களாக கவின் இதைத்தான் செய்கிறார் என எனக்கு இதுவரை தெரியாது என்றார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இன்னொரு விடியோவில் ரெடின் கவின் உடனான நடிப்பு குறித்து பேசும்போது, “அவர் உர்ரென்று இருப்பார்” என செய்து காட்டுவார். அதைப் பார்த்த கவின், “முடிச்சு உட்டீங்க போங்க” என்றார். அதற்கு நேர்காணல் செய்யும் பெண் “இருங்க பாய்” என்றார்…

இந்த வசனங்கள் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் டிரெண்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

pic.twitter.com/6Y134fZnNO

— Sìvá (@itzs_siva) October 24, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024