Sunday, October 27, 2024

வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

மறைந்த டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

மிகப்பெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா மும்பையில் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அக்டோபர் 9 ஆம் தேதி தனது 86 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

ரூ.10,000 கோடிக்கும் அதிகமான சொத்துவைத்திருந்த ரத்தன் டாடா யார் யாருக்கு எவ்வளவு சொத்து பிரித்துகொடுக்கப்பட வேண்டும் என்ற உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்: தவெக தலைவர் விஜய்!

அந்த உயிலில் அவரிடம் மேலாளராக வேலைப் பார்த்த சாந்தனு நாயுடு, டாடாவின் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால சமையல்காரரான ராஜன் ஷா, அவரது பணியாளரான சுப்பையா ஆகியோருக்கு எவ்வளவு சொத்து பிரித்துகொடுக்கப்பட வேண்டும் என்பதையும் எழுதி வைத்துள்ளார். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது சுப்பையாவுக்கு புதிய வெளிநாட்டு ஆடைகளையும் அவர் வாங்கித் தருவது வழக்கம்.

அவர் ஜெர்மன் ஷெபர்ட் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அதன் பெயர் டிட்டோ. அந்த நாய்க்கான நீண்டகால பராமரிப்புக்காகவும் தனியாக சொத்து எழுதிவைத்திருப்பதாக உயிலில் தெரிவித்துள்ளார்.

நியூஸி. சுழலில் சுருண்டது இந்தியா! சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

அவரது அறக்கட்டளை, சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபோய், வீட்டு பணியாளர்களுக்கு அவரது எஸ்டேட் பகிர்ந்தளிக்கப்படும் என்றும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தெடுக்கப்பட்ட டிட்டோ ராஜன் ஷாவால் பராமரிக்கப்படும் என்றும் அந்த உயிலில் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தில் அலிபக்கில் 2000 சதுரடி கடற்கரை பங்களா, மும்பையின் ஜுஹு தாரா ரோட்டில் 2 மாடி கட்டடம், வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.350 கோடி மற்றும் 165 பில்லியன் டாலர்கள் உள்ளன. மேலும் டாடா சன்ஸ்க்கு 0.83% பங்குகள் உள்ளன. ரத்தன் டாடாவின் பங்குகள் டாடாவின் தொண்டு நிறுவன அறக்கட்டளைக்கு மாற்றப்படும்.

சான்ட்னர் சுழலில் சிக்கி தடுமாறும் இந்தியா! விராட் கோலி, ரிஷப் பந்த் ஏமாற்றம்!

View this post on Instagram

A post shared by Ratan Tata (@ratantata)

மகாராஷ்டிர மாநிலம் கோலாபாவில் 20-30 மாடல் கார்கள் தாஜ் வெலிங்டன் மியூஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளன. மேலும் வரும் காலங்களில் இந்தக் கார்கள் புணேவில் அருங்காட்சியங்களில் வைக்கப்படுமா அல்லது ஏலத்தில் விடப்படுமா என்பது குறித்து டாடா குழுமம் முடிவெடுக்கும்.

டாடாவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் டாடா சென்ட்ரல் காப்பகங்களில் தானமாக வழங்கப்பட்டு பத்திரமாக பராமரிக்கப்படும். ரத்தன் டாடா எழுதிவைத்த உயில் மும்பை உயர் நீதிமன்றத்தால் சரிபார்க்கப்படும் என்றும், அதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024