Sunday, October 27, 2024

மன அழுத்தத்தை போக்க காவலர்களுக்கு உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கோவை: காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல்துறை சனிக்கிழமை நடத்தியது.

காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனைப் போக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிக்க |ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா யானை!

கோவை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற மன அழுத்தம் குறைப்பதற்கான போட்டிகளில் பங்கேற்ற பெண்
காவலர்கள்.

அதன்படி, கோவை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் துணை ஆணையாளர் சரவணன் மேற்பார்வையில் சனிக்கிழமை மன அழுத்தம் குறைப்பதற்கான பலூன் உடைத்தல், நடனமாடுதல் மற்றும் யோகா, பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற மன அழுத்தம் குறைப்பதற்கான போட்டிகளில் பங்கேற்ற காவலர்கள்.

இதற்கான ஏற்பாடுகளை கோவை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் நாகராஜ் செய்திருந்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024