12 ஆண்டுகள் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி; டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த நியூசிலாந்து!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கும், இந்திய அணி 156 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் எடுத்தார். கிளன் பிளிப்ஸ் 48 ரன்களும், டாம் பிளண்டல் 41 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: 2 போட்டிகளில் 39 விக்கெட்டுகள்..! யார் இந்த சுழல் பந்துவீச்சாளர்கள்?

இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வரலாற்று வெற்றி

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும், ஷுப்மன் கில் 23 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், கிளன் பிளிப்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024