11,500 திரைகளில் புஷ்பா – 2?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

புஷ்பா – 2 திரைப்படம் அதிக திரைகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, புஷ்பா – 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இதையும் படிக்க: குட் பேட் அக்லி அஜித், அர்ஜுன் தாஸ்!

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற டிச. 6 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளனர். அதன்படி, டிச. 5 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், புஷ்பா – 2 திரைப்படத்தை உலகளவில் 11,500-க்கும் அதிகமான திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம். குறிப்பாக, இந்தியாவில் 6500 திரைகளிலும் வெளிநாடுகளில் 5000 திரைகளிலும் கொண்டு சேர்க்க புரமோஷன் பணிகளைத் தீவிரமாக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024