Sunday, October 27, 2024

வாக்காளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தேர்தல் ஆணையம்! குறிப்பாணைகளில் குழப்பம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

வாக்காளர் பட்டியல் திருந்தப் பணி தொடர்பாக தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் படிவம்-ஏவுடன் கூடிய குறிப்பாணைகள் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக உள்ளன. தகுதியான வாக்காளர் ஒருவர்கட விடுபடக் கூடாது என்பதையும். 100 சதவித வாக்குப் பதிவையும் நோக்கமாகச் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சேர்க்கைக்கும். 100 சதவீத வாக்குப் பதிவுக்கும் பல்வேறு முயற்சிகளை, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதன்படி, ஆண்டுதோறும் ஜன. 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் மீதான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி மாதத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வாக்காளர் இறுதிப் தொடர்புடைய வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் முகவரி மாற்றம் கோருதல், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு உரிய படிவங்களை நிறைவு செய்து அளித்து தேவையான திருத்தங்களை செய்து கொள்ள வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

இருப்பினும் வாக்காளர் பட்டியல் குளறுபடி என்பது தொடர் நிகழ்வாகவே நீடிக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெயர், இறுதிப் பட்டியலில் விடுபடுவது தொடர் பிரச்னையாக உள்ளது, பூர்விகமாக ஒரே முகவரியில் இருக்கும் ஒருவர், பல தேர்தல்களில் வாக்களித்த நிலையிலும் திடீரென அவர் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து மாயமாகிறது.

குளறுபடிகள் இல்லாத வாக்கலானர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.என்ற நோக்கில், ஒன்றுக்கும் மேற்பட்ட பகு திகளில் வாக்குரிமை இருக்கும் நபர்களைக் கண்டறிந்து, ஒரு பதிவைத் தவிர மற்ற பதிவுகளை நீக்குவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் படிவம் ஏவுடன் கூடிய குறிப்பாணைகளே வாக்காளர்களுக்கு தற்போது குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன.

ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை இருப்பதைக் கண்டறிவதற்காக மக்கள் தொகை அடிப்படையில் ஒரே மாதிரியான விவரங்களைக் கொண்டவர்களைக் கண்டறியும் டெமாகிராபிகளி சிமிலர் என்ட் ரீஸ்(DSE) என்ற முறையை தேர்தல் ஆணையும் கையாளுகிறது.

இதன்படி, கணினியில் உள்ள மக்கள்தொகை விவரங்களில் ஒரே பெயர், ஒரே தந்தை பெயர், ஒரே வயது, ஒரே முகவரி ஒரே நபரின் புகைப்படம் உள்ள வாக்காளர்கள் டி.எஸ்.இ. முறையில் கண்டறியப்பட்டு தொடர்புடைய நபருக்கு படிவம் ஏ-வுடன், குறிப்பாணை அனுப்பப்படுகிறது.

அதில், தொடர்புடைய வாக்காளர் தன்னுடைய சரியான முகவரியை, அடையாளத்தை உறுதி செய்து பதில் அளிக்க கோரப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமானோருக்கு இதுபோன்ற குறிப்பாணை கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. இதில், ஒரே பெயர் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லாத பல்லாயிரக்கணக்கானோருக்கு விரைவு தபாலில் குறிப்பாணைகள் அனுப்பப்பட்டு பதில் கோருவது, வாக்காளர்களுக்குத் தேவையற்ற அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஒரு பெண் வாக்காளருக்கு வெள்ளிக்கிழமை (அக். 25) விரைவு தபாலில் ஓர் குறிப்பாணை கிடைக்கப் பெற்றது. அகில் அந்தப் பெண்ணின் பெயர் கொண்ட வேறு இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு, இதில் உங்கள் அடையானத்தை பதிவு செய்யுங்கள் எனக் கோரப்பட்டுள்ளது.

வாக்காளர் வரிசை எண், கணவர் பெயர், வீட்டு முகவரி, மாவட்டம், புகைப்படம் என வேறு எந்த ஒற்றுமையும் இல்லாத நிலையில் ஒரே பெயர் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் குறிப்பாணை அனுப்பி, பதில் கோருவது எந்தவிதத்தில் சரியானது என அந்த வாக்காளர் எழுப்பும் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்.

மேலும் அவருக்குக் கிடைக்கப் பெற்ற படிவம் ஏவுடன் கூடிய குறிப்பாணை செப். 12-ஆம் தேதி கணினியில் உருவாகி உள்ளது. இந்தக் குறிப்பாணைக்கு செப். 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில் தன்னுடைய வாக்காளர் விவரத்தை உறுதி செய்து மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பாணை அக். 25-ஆம் தேதிதான் அவருக்கு விரைவு தபாலில் கிடைத்தது. எனவே காலக்கெடு முடிந்த பிறகு கிடைத்த குறிப்பாணைக்கு பதில் அளிக்க வேண்டுமா, இல்லையா என்பது பொதுவான சந்தேகமாக உள்ளது.

வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் படிவம்-ஏ-வில் உள்ள வாக்காளர்களின் பெயர், முகவரி உள்பட அனைத்து விவரங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்னன. எனவே ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்தப் படிவத்தை எப்படி படித்து, எந்த வகையில் புரிந்துகொண்டு பதில் அளிப்பது என்பதும் தெரியவில்லை. மேலும், இடைப்பட்ட காலத்தில் குறித்த தாளுக்குள் பதில் அளிக்கவில்லையென தொடர்புடைய வாக்காளர் பெயர் நீக்கப்படுமானால், தகுதியான வாக்காளர்கள் பலரும் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி துணை ஆணையர் ஒருவர் தெரிவித்ததாவது ஒருவரின் இரட்டை வாக்குரிமையைக் கண்டறிவதற்காக தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள மென் பொருள் மூலமே இந்தப் படிவம் தயாரிக்கப்படுகிறது. தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம் என்ற அடிப்படையில் முத்திரையிட்டு அனுப்புவதும், குறிப்பாணைக்கு வாக்காளர் அளிக்கும் பதில் பதிவை பதிவேற்றம் செய்வதும் மட்டுமே எங்கள் பணி என்றார்.

இந்திய தேர்தல் ஆணைய நிலையான வழியாட்டு நெறிமுறைகள்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றே குறிப்பாணை அனுப்பப்பட்டாலும், வாக்குச் சாவடி அலுவலர் களஆய்வு மேற்கொண்ட பின்னரே வாக்காளரின் பெயரை நீக்க வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்தில் இதுவரை முழுமையாகக் கடைப் பிடிக்கப்பட்டது இல்லை. இனியும். இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லையெனில், தகுதியான வாக்காளர்கள் பலரும் வாக்குரிமையை இழக்க நேரிடும். மேலும், குழப்பத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆணைய குறிப்பாணை பிரச்னைக்கு அரசுத் துறைகளும் அரசியம் கட்சிகளும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பு.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024