தவெக முதல் மாநில மாநாட்டின் உறுதிமொழிகள் ஏற்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

விழுப்புரம்: நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் உறுதி மொழிகள் வாசிக்கப்பட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்.

நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் , வி.சாலை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு அந்த கட்சியின் 4 மணியளவில் தொண்டர்களின் ஆரவார கோஷத்துக்கு மத்தியில் மிகவும் உற்சாகமாக மேடைக்கு வந்த விஜயை பார்த்த தொண்டர்கள் வீசிய தவெக கட்சி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தொண்டர்களின் நோக்கி கையசைத்தப்படி மேடைக்கு வந்தடைந்தார்.

இதனிடையே மாநாட்டில் கூடியிருக்கும் தொண்டர்களின் உற்சாகத்தை கண்டு கண்கலங்கினார் விஜய்.

பின்னர் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்து சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் தவெக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய்.

இதையடுத்து மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

இதையும் படிக்க |சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை

தவெக மாநாட்டின் உறுதிமொழிகள்

மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடக்கமாக தவெக பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழிகளை வாசித்தார்.

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்;

நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த, மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில், தொடர்ந்து பாடுபடுவேன்;

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகனாக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்;

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்;

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024