வெற்றி வாகை: தவெக கொள்கை பாடல் வெளியீடு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொள்கை பாடல் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

வெற்றி வாகை எனத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்கிற திருக்குறள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. மேலும் பாடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவைதவிர கட்சியின் கொள்கைகளை விளக்கும் விதமாக கொள்கை பாடலில் விஜய்யும் பேசியிருக்கிறார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கட்சி பாடலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டி சாலையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துடன் மாநாடு நடைபெற்று வருகிறது.

அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாக முழுக்கம் எழுப்பினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடலுக்கு பின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்தனர்.

சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை

விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். மாநாட்டில் 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களின் கூட்டம் அதிகளவில் உள்ளனர். அதேசமயம் பெண்கள் மற்றும் முதியவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சரியாக 4 மணியளவில் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார்.

ஆரவாரத்துக்கு மத்தியில் தொண்டர்களை நோக்கி இருகரம் கூப்பி விஜய் வணக்கம் செலுத்தினார். மாநாட்டில் தொண்டர்கள் அளித்த கட்சித் துண்டை அதன் தலைவர் விஜய் அணிந்து கொண்டார். தொண்டர்களின் ஆரவாரத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விஜய் காணப்பட்டார்.

தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து 100 அடி உயர கட்சிக் கொடியை ரிமோட் மூலம் விஜய் ஏற்றினார்.

தமிழக வெற்றிக் கழக கொடியை ஏற்றி வைத்தவுடன் கட்சியின் கொடி பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மாநாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்தினை தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள்

இதனிடையே தவெக மாநாட்டில் பேசிய நிர்வாகி சம்பத் குமார், தமிழக வெற்றிக் கழக கொள்கைகள் என்ன என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி,

• மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கை.

• மதம், சாதி, பாலினம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே.

• மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை.

• தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.

• தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை தவெக பின்பற்றும் என்பன உள்ளிட்டவைகள் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024