ராகவா லாரன்ஸின் புல்லட் கிளிம்ஸ்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புல்லட் படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.

திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கினார்.

ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி – 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

இதையும் படிக்க: பிரதர் வெளியாவதில் சிக்கல்?

தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரமேஷ் வர்மா இயக்கத்தில், ’கால பைரவா’ என்கிற பான் இந்தியப் படத்திலும் ‘டைரி’ பட இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ என்கிற படத்திலும் நடிக்கவுள்ளார்.

தற்போது, புல்லட் படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் காவல்துறை அதிகாரியாகவும் அவரது தம்பி எல்வின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024