Thursday, October 31, 2024

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

இதையடுத்து இன்று காலை 7 மணி அளவில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் அரசின் சார்பில் கலந்து கொண்டு அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு,பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, மகேஷ் அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024