Wednesday, October 30, 2024

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரபாடா..! பும்ரா பின்னடைவு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியதால் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ராபாடா 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 29 வயதாகும் ககிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்டுகளை சமீபத்தில் கடந்தார். மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிக்க:விராட் கோலிக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை..! முன்னாள் ஆஸி. வீரர் கருத்து!

2018ல் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். பின்னர் பின்னடைவை சந்தித்த ரபாடா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் நோமன் அலி டாப் 10க்குள் நுழைந்துள்ளார். பும்ரா, அஸ்வின் பின்னடைவை சந்தித்துள்ளார்கள்.

மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி 44ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இதற்கு முன்பாக சான்ட்னர் 2017ஆம் ஆண்டு 39ஆவது இடத்தில் இருந்ததே அவரது உச்சபட்ச தரவரிசையாகும்.

இதையும் படிக்க: விராட் கோலி இன்ஸ்டாவில் பிளாக் செய்திருந்தார்..! சுவாரசியம் பகிர்ந்த மேக்ஸ்வெல்!

தரவரிசைப் பட்டியல்

1. ககிசோ ரபாடா – 860 புள்ளிகள்

2. ஜோஷ் ஹேசல்வுட் – 847 புள்ளிகள்

3. ஜஸ்பிரீத் பும்ரா- 846 புள்ளிகள்

4. ரவி அஸ்வின் – 831 புள்ளிகள்

5. பாட் கம்மின்ஸ் – 820 புள்ளிகள்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024