2024ஆம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 245 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 10 இன்னிங்ஸ், 5 போட்டிகளில் சராசரியாக 27.22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விராட் கோலி 8 டெஸ்ட் போட்டிகளில் 556 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 3 அரைசதம் அடித்துள்ளார்.
2020க்குப் பிறகு விராட் கோலி டெஸ்ட்டில் மோசமாக விளையாடி வருகிறார். 58 இன்னிங்ஸில் 1,833 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 32.73. இதில் 2 சதம், 9 அரைசதங்கள் அடங்கும்.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முன்னாள் ஆஸி. சுழல்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.
53 வயதாகும் சுழல் பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியதாவது:
இந்திய அணியினர் நியூசிலாந்தை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டனர். 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் விராட் கோலியின் மனநிலையை பாருங்கள். திடீர் மாற்றம் இருந்தது. மிகவும் ஆக்ரோஷமாக விளையாட நினைக்கிறார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை அதிரடியாக விளையாட நினைத்தார்.
மிகவும் அதிகமாக மெனக்கெட்டு விளையாடினார். விராட் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவில்லை போலிருக்கிறது. அவர் ஆட்டமிழக்கும் விதத்தினை பார்த்தாலே இது புரிகிறது. சௌதியுடன் ரோஹித் சர்மா எடுக்கும் முடிவினை பாருங்கள். அது மிகவும் இறுக்காமாக இருந்தாலும் ரோஹித் புதியதாக முயற்சிக்கிறார்.
விராட் முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டுமென நினைக்கிறார் என்றார்.
நவ.22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட்டில் விளையாடுகிறது.
2ஆவது டெஸ்ட் – டிச.6-10 அடிலெய்டில்,
3ஆவது டெஸ்ட் – டிச.14-18 பிரிஸ்பேனில்,
4ஆவது டெஸ்ட் – டிச.26-டிச.30 மெல்போர்னில்,
5ஆவது டெஸ்ட் – ஜன.3-7, சிட்னியில் நடைபெறவிருக்கிறது.
ஷமி அணியில் இல்லாததால் பும்ராவுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். ரோஹித் கேப்டனாகவும் பும்ரா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.