பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
மலையாளத்தில், ‘கிஸ்மத்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சுஷின் ஷ்யாம். தொடர்ந்து, கும்பளாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், குருப், மாலிக், ரோமஞ்சம், மஞ்ஞுமல் பாய்ஸ், ஆவேஷம் உள்ளிட்ட 20 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இறுதியாக, ஃபஹத் ஃபாசில் நடித்த போகன்வில்லா வெளியானது.
சில ஆண்டுகளாக மலையாள சினிமாவில் பெரிய வரவேற்பைப் பெற்ற இசையமைப்பாளராக வலம் வருகிறார். பல பெரிய படங்களும் சுஷின் ஷ்யாமின் நேரத்திற்காகக் காத்திருக்கின்றன.
இதையும் படிக்க: விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண விடியோ வெளியீட்டுத் தேதி!
இவர் இசையமைப்பில் வெளியான பாடல்களும் மலையாளத்தில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பெரிய கவனத்தைப் பெற்று வருகின்றன. ரோமஞ்சம் படத்தில் இடம்பெற்ற, ‘ஆத்மாவே போ’, மஞ்ஞுமல் பாய்ஸின் ‘குதந்தரம்’, ஆவேஷமின் ‘இலுமினாட்டி’ பாடல் உள்ளிட்டவை தமிழிலும் வெற்றி பெற்றவை.
இந்த நிலையில், இன்று சுஷின் ஷ்யாம் தன் நீண்ட நாள் காதலியான உத்தாரா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துள்ளார். குடும்பத்தினர் முன்னிலையில் கோவிலில் எளிமையாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.