சௌதி கிங் கோப்பையின் ரவுன்ட் ஆஃப்16 சுற்றின் முக்கியமான போட்டியில் அல்-நசீர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் அல்-தாவுன் அணியிடம் தோல்வியுற்றது.
5 முறை பேலன் தோர் (தங்கப் பந்து) விருது வாங்கிய ரொனால்டோ இரண்டாடுகள் ஆகியும் எந்தவொரு பெரிய கோப்பையையும் பெற்றுத் தரவில்லை.
கடந்த 2022இல் அல்-நசீர் அணிக்காக ரொனால்டோ இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு 2025 வரை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
71ஆவது நிமிடத்தில் அல்-தாவுன் அணியின் வலீத் அல்- அஹ்மது கோல் அடித்து அசத்தினார். அல் நசீர் அணிக்கு 95ஆவது நிமிடத்தில் பெனால்டி கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிக்க:நிறப் பாகுபாடு..? தங்கப் பந்து விருது கிடைக்காதது குறித்து வினிசியஸ் ஜூனியர்!
ரொனால்டோ அடித்த பந்து கோல் போஸ்டினை தாண்டி பார்வையாளர்களிடம் சென்றது. அங்கு ஒரு சிறுவன் வைத்திருந்த செல்ஃ போன் மீது விழுந்தது. எளிமையான வாய்ப்பினை ரொனால்டோ தவறவிட்டார்.
இதற்கு முன்னதாக 18 முறை பெனால்டி கோலை ரொனால்டோ சரியாக கோலாக மாற்றியிருந்த நிலையில் இந்தமுறை அல்-நசீர் அணியின் சொந்த மண்ணில் 14,519 பேருக்கு முன்னிலையில் அதை நிகழ்த்த தவறிவிட்டார்.
இந்த சீசனில் அல் நசீர் அணிக்கு 2 வாய்ப்புகள் இருந்தாலும் ஏற்கனவே அல் -ஹிலால் 6 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
அல்-நசீர் அணியின் பயிற்சியாளர் ஸ்டெபனோ பியோலி, “கோப்பையில் இருந்து வெளியேறுவது வருத்தமளிக்கிறது. ஆனால், இன்னும் 2 கோப்பைகள் இருக்கின்றன. அதில் எங்களது சிறந்த பங்களிப்பினை தருவோம்” என்றார்.
இதையும் படிக்க: விராட் கோலி இன்ஸ்டாவில் பிளாக் செய்திருந்தார்..! சுவாரசியம் பகிர்ந்த மேக்ஸ்வெல்!
தோல்விக்குப் பிறகு ரொனால்டோ தனது எக்ஸ் பக்கத்தில், “ஒவ்வொரு சவாலும் வளர்வதற்கான ஒரு வாய்ப்பு” எனக் கூறியுள்ளார்.
எளிமையான வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோவை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.