0
தீபாவளியையொட்டி ஏராளமான மக்கள் கடைகளுக்கு படையெடுப்பார்கள் என்ற நிலைமை, இந்த முறை தியாகராய நகரில் மாறியுள்ளதை காண முடிகிறது.
சென்னையின் ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகம் விருப்பப்படும் தி.நகரில் இன்று(அக்.30) கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.தீபாவளியை கொண்டாட தேவையான ஆடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருள்களை விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானோர் வாங்கிவிட்டதால் தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று தி.நகரில் மக்கள் கூட்டம் வார நாள்களில் இயல்பாக இருக்கும் அளவிலேயே இருப்பதைக் காண முடிகிறது.
இதனிடையே, இன்று பகல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் மதியம் சந்தைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதையும் படிக்க:தீபாவளி.. கடைசி நேர ஷாப்பிங்கை மந்தமாக்கிய மழை!