ஏக்தா நகர்(குஜராத்): குஜராத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக். 30) நாட்டினார்.
இந்திய ஒருங்கிணைப்புக்காக பாடுபட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் நிகழாண்டு தீபாவளித் திருநாளான வியாழக்கிழமை(அக்.31) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குஜராத் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நர்மதா மாவட்டத்தில் ஏக்தா நகர் பகுதியில், சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான ’ஒற்றுமை சிலையை’ இன்று பார்வையிட்டார்.
அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்தார். ரூ. 75 கோடியில் அமைக்கப்பட்ட உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.