நடிகை சமந்தா நடிப்பில் உருவான சிட்டாடல் இணையத் தொடரின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பிலிருந்து மீண்டதிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். விரைவில் தன் தயாரிப்பிலேயே, ‘மா இண்டி பங்காரம்’ என்கிற ஆக்சன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையே, அவர் நடித்து முடித்த இணையத் தொடர் ’சிட்டாடல் ஹனி பனி’ (Citadel – honey bunny). ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் உருவான இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் நவ. 7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் இரண்டாவது டிரைலரை வெளியிட்டுள்ளனர். முதல் டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது.
இதையும் படிக்க: ஓடிடியில் ஹிட்லர்!
சிட்டாடல் தொடரில் சமந்தா உளவுத்துறை ஏஜெண்டாக நடித்திருக்கிறார். அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளுமாகத் இத்தொடர் உருவாகியுள்ளது.
அமெரிக்க இணையத் தொடராக உருவான சிட்டாடல் ஸ்பெயின், மெக்சிகன் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் சமந்தா, வருண் தவான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.