அமரன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்னும் சற்றுநேரத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் படத்தை மேற்கோள்காட்டி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : அமரன் படக்குழுவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
முன்னதாக நேற்றிரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமரன் திரைப்படக் குழுவினர் சிறப்புத் திரையிடல் செய்தனர். இந்தப் படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.